நஞ்சில்லா காய்கறிகள் சாகுபடி செய்ய பயிற்சி முகாம்

By செய்திப்பிரிவு

வாழவச்சனூர் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் திருவண்ணா மலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் கிராமத்தில் நஞ்சில்லா காய்கறி பயிர்கள் சாகுபடி பயிற்சி முகாம் நடை பெற்றது.

நீர்வள நிலவளத் திட்டத்தின் மூலம் ஆழியார் பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். அப்போது அவர், “காய்கறி பயிர்களுக்கு அடியுரமாக வேப்பம் புண்ணாக்கு இடுதல், மஞ்சள் வண்ண அட்டையை பயன்படுத்துதல், நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், வேம்பு சார்ந்த தாவர பூச்சி கொல்லிகளை பயன்படுத்துதல், திருந்திய நெல் சாகுபடி, விதை உற்பத்தி, உயிர் உரங்கள் உற் பத்தி’ குறித்து எடுத்துரைத்தார்.

மேலும், முதன்மை விஞ் ஞானி முனைவர் அய்யாதுரை, துல்லிய பண்ணையத்தில் காய்கறி சாகுபடி செய்யும் திட்டம் குறித்து விளக்கினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை இளநிலை உதவியாளர் பிருந்தா செய்திருந்தார். இதில், 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்