மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு(சிடெட்) முடிவுகளை சிபிஎஸ்இவெளியிட்டு, சான்றிதழ்களை டிஜிலாக்கர் செயலி மூலமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடெட்) நாடு முழுவதும் கடந்த ஜனவரி 31-ம் தேதி நடைபெற்றது. அதன்படி, 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஆசிரியராக பணியாற்ற விரும்புவோருக்கான முதல் தாளை 12 லட்சத்து 47 ஆயிரத்து 217 பேரும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியராக பணியாற்ற விரும்புவோருக்கான 2-ம் தாளை 11 லட்சத்து 4 ஆயிரத்து 454 பேரும் எழுதினர். அதேபோல, 2 நிலைகளிலும் பாடம் நடத்த விரும்பியவர்கள் 2 தாள்களும் எழுதினர்.
இதைத் தொடர்ந்து, தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலை சிபிஎஸ்இ கடந்த 19-ம் தேதி வெளியிட்டது. மதிப்பெண் பட்டியலில் ஏதேனும் தவறு இருந்தால் இணையதளம் மூலமாகவே கருத்து தெரிவிக்கவும் அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், www.ctet.nic.inமற்றும் www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் சிடெட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, முதல் தாள் எழுதிய வர்களில் 4 லட்சத்து 14 ஆயிரத்து 798 பேரும், 2-ம் தாளில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 501 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தற்போது சிடெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ், தகுதி சான்றிதழ் ஆகியவை டிஜிட்டல் முறையில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. டிஜிலாக்கர் (DigiLocker) செயலிமூலம் இவற்றை பதிவிறக்கலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago