சென்னையில் உள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் வசதிக்காக புதிய அஞ்சல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை தரமணியில் உள்ளதமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பல்கலைக்கழக வளாகத்தில், மாணவர்களின் வசதிக்காக புதிய அஞ்சல்நிலையம் நேற்று திறக்கப்பட்டது.
சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் சுமதி ரவிச்சந்திரன், புதிய அஞ்சல் நிலையத்தை திறந்து வைத்தார். அவர் பேசும்போது, ‘‘புதிய அஞ்சல்நிலையம் திறப்பது என்பது எளிதான காரியம் இல்லை. பல்வேறு அனுமதிகளை பெற வேண்டி உள்ளது. இந்த அஞ்சலகத்தில் மாணவர்களின் வசதிக்காக பாஸ்போர்ட் அலுவலகத்தின் அனுமதி பெற்று பாஸ்போர்ட் மேளா நடத்தப்படும். அதேபோல், ஆதார் மேளாவும் நடத்தப்படும்’’ என்றார்.
விழாவில் அஞ்சல்துறை சார்பில் ‘மை ஸ்டாம்ப்’ வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், துணைவேந்தர்சாஸ்திரி சென்னை நகர மண்டல அஞ்சல்துறை இயக்குநர் சோமசுந்தரம், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் னிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago