சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், எப்போதும் நிலையான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தருவதற்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்றி வருகிறது. கடந்த 24-ம் தேதி நேருபூங்கா மெட்ரோ ரயில் நிலையத்துக்கும் எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கும் இடையில் மெட்ரோ ரயிலில் பயணித்த பயணி ஒருவருக்கு திடீரென அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. மெட்ரோ ரயில் ஓட்டுநர் பி.எம்.ராஜீவ் மற்றும் எழும்பூர் மெட்ரோ ரயில் நிலைய கட்டுப்பாட்டாளர் ஜே.ராஜேஷ் இருவரும் அந்த பயணிக்கு முதலுதவி அளித்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவர்கள் சரியான நேரத்தில் செய்த உதவியால், பயணியின் உயிர் காப்பாற்றப்பட்டது. இதுபோன்ற மனிதாபிமான செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களை நேரில் அழைத்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் பிரதீப் யாதவ் பாராட்டினார். மேலும், அவர்களுக்கு பரிசு மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்வின்போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர்கள் சுஜாதா ஜெயராஜ், ராஜீவ்நராயண் திவேதி, ராஜேஷ் சதுர்வேதி உட்பட பலர் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago