சென்னை தீவுத்திடலில் மீன் உணவு திருவிழா அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

தீவுத்திடலில் மீன் உணவு திருவிழாவை அமைச்சர் டி.ஜெயக் குமார் தொடங்கி வைத்தார்.

சென்னை தீவுத்திடலில் மீன்வளத் துறை சார்பில் மீன் உணவு திருவிழா நேற்று தொடங்கியது. இதை மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். மீன் உணவு திருவிழாவில் 15 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகளில் மீன், இறால், நண்டு, கணவாய் உள்ளிட்டவற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட மீன் கட்லட், இறால் வறுவல், இறால்பிரியாணி, மீன் கபாப் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மீன் உணவு வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் விலைரூ.75 - ரூ.300 வரை நிர்ணயிக் கப்பட்டுள்ளது.

இவ்விழாவுக்கு அனுமதி இலவசமாகும். மீன் உணவு திருவிழா அரங்குகள் காலை 10 மணி முதல்மாலை 6 மணி வரை செயல்படஉள்ளன. புகழ்பெற்ற சமையல்கலை வல்லுநர்கள், கடல் உணவுவகைகளை தயாரிப்பது குறித்தசெயல்முறை விளக்கம் அளிக்கஉள்ளனர். மேலும், சமையல்கலை மாணவர்கள், மீனவ மகளிர்சுய உதவிக் குழுக்களிடையே இன்றும் நாளையும் சமையல் போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன. இவ்விழா நாளை நிறைவடைகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்