திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் பொற்றாமரை குளத்தில் அப்பர் தெப்பத் திருவிழா நடைபெற்றது.
அப்பர் பெருமான் வாழ்வில் நடைபெற்ற தெப்ப வரலாற்றுக்கு இணங்க, பாடல்பெற்ற சைவ சமயத் தலமான இத்திருக்கோயிலில் அம்மன் சந்நிதி அருகில் அமைந் துள்ள பொற்றாமரை குளத்தில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அப்பர் பெருமான் பவனி நேற்றுஇரவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, வரலாற்று தத்துவத்திலுள்ளவாறு திருத்தெப்ப மண்டபத்தில் சுவாமி கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்க கிளி வாகனத்திலும் எழுந்தருளி அப்பர் பெருமானுக்கு திருக்காட்சி கொடுக்கும் நிகழ்வும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் சா.ராமராஜா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
அம்மன் சந்நிதி அருகில் அமைந் துள்ள பொற்றாமரை குளத்தில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அப்பர் பெருமான் பவனி நேற்று இரவு நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago