கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் அணைகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் தற்போது 41.15 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 423 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 667 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 59 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 43 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் 350 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. சிற்றாறு ஒன்று அணையில் 7.87 அடி தண்ணீர் உள்ளது. 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கம் முக்கடல் அணையின் நீர்மட்டம் 14 அடியாக உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago