அரசு ஐ.டி.ஐ.க்களை மேம்படுத்த தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொது மற்றும் தனியார் கூட்டமைப்பின்கீழ், தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 32 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை (ஐ.டி.ஐ.) மேம்படுத்திடும் திட்டம் நடைமுறையில் உள்ளது.இத்திட்டத்தின்கீழ், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை மேம்படுத்த மத்திய அரசால் ரூ.2.50 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்நிறுவனங்கள், அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து, தொழிற்பயிற்சி நிலையத்தை மேம்படுத்த விருப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பான கூடுதல் விவரங்களை www.tenders.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை 'இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, ஆலந்தூர் சாலை, கிண்டி, சென்னை-600032’ என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வரும் 26-ம் தேதி மாலை 4 மணி வரை பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 0422-22501083, 044-22500099, 044-22500199 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்