கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் ஆ.ஜோதிமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:
வேலைவாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்து, வேலை வாய்ப்பு கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு தமிழக அரசால் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.200, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400, பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்புக்கு காத்திருப்பவர்களாக இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு ஓராண்டு முடிவடைந்திருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாலும், மற்ற பிரிவினர் 40 வயதுக்கு மிகாலும் இருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். படிப்பை தமிழகத்தில் முடித்து, 15 ஆண்டுகளாக தமிழகத்தில் வசித்து வருபவராகவும் இருக்க வேண்டும்.
கல்லூரிக்குச் சென்று படிப்பவராக இருக்கக்கூடாது. தொலைநிலைக் கல்வி வழியாக படிப்பராக இருக்கலாம். வேலைவாய்ப்புப் பதிவை தொடர்ச்சியாக புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பத்தை www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்குத் தொடங்கி, கணக்குப்புத்தகம், குடும்ப அட்டை, ஆதார்அட்டை, வேலைவாய்ப்பு பதிவு அட்டை, கல்விச் சான்றிதழ் களுடன், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago