திருமூர்த்திமலையில் வெறிச்சோடி காணப்படும் அரசு நீச்சல் குளம்

By செய்திப்பிரிவு

உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில் அரசு நீச்சல் குளம் உள்ளது. உடுமலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் இதனை பராமரிக்கிறது. நீச்சல் குளத்தில் குளிக்க பெரியவர்களுக்கு ரூ. 25-ம், சிறியவர்களுக்கு ரூ.15-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 4 முதல் 6 அடி ஆழம் உள்ள இந் நீச்சல் குளத்துக்கு தினமும் ஏராளமானோர் வருவது வழக்கம்.

2020 மார்ச் மாதம் முதல் கரோனா வைரஸ் அச்சம் காரணமாக நீச்சல் குளம் மூடப்பட்டது. ஓராண்டுக்குப் பிறகு அண்மையில் திறக்கப்பட்டதும் ஓரிரு நாட்கள் சுற்றுலாப் பயணிகளின் வருகை இருந்தது. தற்போது சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி நீச்சல் குளம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

இதுகுறித்து ஊழியர்கள் கூறும்போது, “மக்களிடையே கரோனா அச்சம் இன்னும் முழுமையாக மறையவில்லை. நீச்சல் குளத்துக்கு வருவோர் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றியே அனுமதிக்கப்படுகின்றனர். ஆனாலும் எதிர்பார்த்த அளவில் மக்களின் வருகை இல்லை. இனி வரும் நாட்களின் வருகை அதிகரிக்கலாம்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE