மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை ரூ.3000 ஆகவும், கடும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.5000 ஆகவும் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர், திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் நேற்று முன்தினம் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2-வது நாளான நேற்று பல்லடம் சாலையில் மறியில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜெயபால் மற்றும் பொருளாளர் காளியப்பன் முன்னிலை வகித்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் போராட்டத்தைக் கைவிட வலியுறுத்தப்பட்டது. அப்போது போலீஸாருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உட்பட 65 பேரை போலீஸார் கைது செய்து, வீரபாண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE