தேசிய காசநோய் ஒழிப்பு தினத்தையொட்டி, பொது சுகாதாரத் துறை சார்பில், பொங்கலூரில் காசநோய் பற்றியும், பரவும் விதம் பற்றியும், பரிசோதனைகள் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் குறித்தும் கருத்தரங்கு நடைபெற்றது.
நிகழ்வில், வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரவேல், மருத்துவ அலுவலர் சாம்பால் ஆகியோர் காசநோய் தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். மேலும் காசநோயாளிகளுக்கு மாத்திரைகள் வழங்குவது பற்றியும், தமிழக அரசின் சார்பில் காசநோயாளிகளுக்கு வங்கிகளில் செலுத்தும் ரூ. 500 குறித்தும் விளக்கினார்கள். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள காசநோய் சிகிச்சை வசதி பற்றி காசநோய் மேற்பார்வையாளர் செந்தில்குமார் விளக்கினார். இதற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வரதராஜ், சுகாதார ஆய்வாளர்கள் கந்தசாமி, மோகன்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago