நிலக்கோட்டை அருகே லாரியில் இருந்து பெயிண்ட் டப்பாக்களை திருடிய கும்பலை போலீஸார் கைது செய்தனர்.
கோவையில் இருந்து மது ரைக்கு பெயிண்ட் டப்பாக் களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று செம்பட்டி- நிலக்கோட்டை சாலையில் சென்றது. லாரியை வாடிப்பட்டியைச் சேர்ந்த சங்கர் கணேஷ் ஓட்டிச்சென்றார்.
செம்பட்டி அருகே லாரியைப் பின்தொடர்ந்த சிலர், வேகத் தடையில் லாரி மெதுவாகச் சென்ற போது பின்பக்கமாக ஏறி தார் பாயைக் கிழித்து உள்ளே இருந்த புதிய பெயிண்ட் டப்பாக்களைத் திருடி பின்தொடர்ந்து வந்த ஆம்னி வேனில் இருந்தவர்களிடம் கொடுத்தனர். லாரி சென்று கொண்டிருந்தபோதே இந்தத் திருட்டு நடந்தது.
சில கி.மீ சென்ற பிறகு லாரியின் மேல் ஆட்கள் இருப்பதை அறிந்த ஓட்டுநர் சங்கர்கணேஷ் லாரியை வேகமாகவும் வளைத்தும் ஓட்டியுள்ளார். இதனால் திருட்டுக் கும்பல் திணறியது.
மைக்கேல்பாளையம் அருகே சென்றபோது சாலையோர விளை நிலத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியில் ஆட்கள் சிலர் ஈடுபட்டிருந்ததைக் கண்ட லாரி ஓட்டுநர். அங்கு லாரியை நிறுத்தி தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அக்கும்பல் ஆம்னி வேனில் தப்பியது.
போலீஸாருக்கு தகவல் தரவே இரவு ரோந்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி குளத்துப்பட்டி கண்மாய் அருகே நின்ற ஆம்னி வேனில் இருந்தவர்களைப் பிடித்தனர்.
இதில் மதுரை புதுவிளாங்குடி விக்னேஷ்வரன் தலைமையில் செம்பட்டி-நிலக்கோட்டை சாலையில் சரக்கு வாகனங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து விக்னேஷ்வரன், நாக அர்ஜூன், வீரமணி, நாகமலை, பரதன், பிரபாகரன், இவர்களுக்கு லாரிகள் வருவது குறித்து தகவல் தெரிவித்த செம்பட்டி விஜயகுமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago