முக்கிய நிகழ்வான மகா சிவராத்திரி மார்ச் 11-ம் தேதி நடைபெறும். அன்று காலை 9 மணிக்கு மேல் நடராஜர் கேடயத்தில் எழுந்தருளுதல் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து, கோயில் அனுப்பு மண்டபத்தில் பட்டயம் வாசித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு ஒளி வழிபாடு முடிந்ததும், சுவாமி - அம்பாள் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
மார்ச் 12-ம் தேதி காலை 9.30 மணிக்கு சுவாமி, அம்பாள் திருத்தேரில் எழுந்தருளுகிறார்கள். தொடர்ந்து தேரோட்டம் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.
மார்ச் 13-ம் தேதி மாசி அமாவாசை தினத்தில் காலை 9 மணிக்கு மேல் சுவாமி - அம்பாள் இந்திர விமானத்தில் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். பிற்பகல் 12 மணிக்கு தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி, அக்னி தீர்த்தக் கடற்கரைக்கு வந்து அங்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.
மகா சிவராத்திரி விழா ஏற்பாடுகளை ராமநாதசுவாமி கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago