ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட தாணுமாலையன்புதூர் பகுதியில் ரூ.50 லட்சம் செலவிலும், அழகியநகர் பகுதியில் ரூ.50 லட்சம் செலவிலும், சுப்பிரமணியபுரம் பகுதியில் ரூ.35 லட்சத்திலும் அலங்கார வண்ண தரைதள கற்கள் அமைப்பது உள்ளிட்ட மொத்தம் ரூ.1.55 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இப்பணிகளை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தொடக்கி வைத்தார். தொடர்ந்து திட்டுவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 1,259 விவசாயிகளுக்கு ரூ.4.12 கோடி மதிப்பிலான பயிர்கடன் தள்ளுபடி ஆணையை தளவாய் சுந்தரம் வழங்கினார். தோவாளை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சாந்தினி பகவதியப்பன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பரமேஸ்வரன் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago