சுங்கச்சாவடியில் எந்த வாகனத்துக்கும் விலக்கு கிடையாது

மதுரை - கன்னியாகுமரி சுங்கச்சாவடி நிர்வாக திட்ட தலைவர்ஏ.சீனிவாச கிரண் வெளியிட்டுள்ள அறிக்கை: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பாஸ்டாக் மூலம் கட்டணம் வசூல் செய்வதை இந்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. இந்நிலையில் கடந்த 16-ம் தேதி கயத்தாறு அருகே சாலைப்புதூர் சுங்கச்சாவடி வந்த சிலர், பாஸ்டாக் வசூலிப்பதற்கும், உள்ளூர் நபர்களிடமிருந்து சுங்க கட்டணம் வசூலிப்பதற்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பாஸ்டாக் இல்லாத வாகனத்துக்கு அபராதம் வசூலிக்கப்படும். மேலும், சுங்கச்சாவடி நிர்வாகத்துக்கும், தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் கீழ் கட்டணமில்லாமலோ அல்லது விலக்கோ அளிக்க சுங்கச்சாவடி நிர்வாகத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. சுங்கச்சாவடி நிர்வாகம் போராட்டக்காரர்கள் கோரியபடி விலக்குகளை வழங்க கூடிய அதிகாரத்தில் இல்லை. பாஸ்டேக் அபராதமாக வசூலிக்கப்படும் தொகையில் 50 சதவீத தொகையை என்ஹெச்ஏஐ-க்கு செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE