திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நடைபெற்றது.
திருநெல்வேலி தச்சநல்லூரில் 100 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பணம் செலுத்தி, சேமிப்பு புத்தகத்தை மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா வழங்கினார். பாளையங்கோட்டை பிஷப் சார்ஜென்ட் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில்காலை உணவும், பார்வையற்றமுதியோருக்கு உணவும் வழங்கப்பட்டது. கொக்கிரகுளத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகேஅலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டின் ஏற்பாட்டில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது. கோபாலசமுத்திரம் பிராஞ்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு சட்டத்துறை முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா மாலை அணிவித்தார். ஊராட்சியில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன. நகர ஜெயலலிதா பேரவை முன்னாள் பொருளாளர் பூபதி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
அமமுக சார்பில் வண்ணார்பேட்டையில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாவட்ட செயலாளர் பரமசிவ ஐயப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி டூவிபுரம் 7-வதுதெருவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள்முதல்வர் ஜெயலலிதா உருவப் படத்துக்கு எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ரத்ததான முகாம் நடைபெற்றது. கயத்தாறு, கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளத்தில் நடந்த விழாவில் அமமுக தென்மண்டல பொறுப்பாளர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா பங்கேற்று ஜெயலலிதா உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்.
நாகர்கோவில்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் தேரூரில் உள்ள ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் அசோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம், அஞ்சுகிராமம், தக்கலை, குளச்சல், மார்த்தாண்டம் போன்ற பகுதிகளிலும் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago