26 பேர் டிஇஓவாக பதவி உயர்வு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்கள் 25 சதவீதம்நேரடி நியமன முறையிலும், 75 சதவீதம் பதவி உயர்வு அடிப்படையிலும் நிரப்பப்படுகின்றன. பதவி உயர்வு அடிப்படையில் 40 சதவீதம் அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், 35 சதவீதம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் ஒதுக்கப்படுகின்றன.

அந்த வகையில் நடப்பு கல்விஆண்டில் அரசு உயர் நிலைப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 26 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு அவர்கள் மாவட்ட கல்விஅதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பான அறிவிப்பை பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வெளியிட்டுள்ளார். அதில், பதவி உயர்வு பெற்றிருக்கும் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கல்வி மாவட்டத்தில் பணியேற்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்