இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் புதிய தலைவராக டாக்டர் சக்திவேல் தேர்வு

By செய்திப்பிரிவு

இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (ஃபியோ) புதிய தலைவராக டாக்டர் ஏ.சக்திவேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டாக்டர் ஏ.சக்திவேல் தற்போது ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் (ஏஇபிசி) தலைவராக உள்ளார். அத்துடன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவராகவும் உள்ளார்.

35 ஆண்டுகள் அனுபவம்

வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் பெற்றவரான சக்திவேல், நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு, குறிப்பாக, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளார். ஏற்றுமதி துறைக்கு இவர் ஆற்றிய மகத்தான பணியின் காரணமாக, ரூ.15 கோடி என்ற அளவில் இருந்த திருப்பூர் ஆடைகள் ஏற்றுமதி வளர்ச்சி இன்றைக்கு ரூ.26 ஆயிரம் கோடியாக அதிகரித்து உள்ளது.

சர்வதேச வரைபடத்தில் திருப்பூர்

அத்துடன், சர்வதேச வரைபடத்தில் திருப்பூரையும் இடம் பெற செய்தார்.சக்திவேல் யூகோ வங்கி, ஐடிபிஐ வங்கி ஆகியவற்றின் இயக்குநர் குழுவிலும் சேர்ந்துபணியாற்றி உள்ளார். பாப்பீஸ்குழுமத்தின் நிறுவன தலைவராகவும் உள்ளார்.

பத்ம விருது

நாட்டின் ஜவுளித்துறை வளர்ச்சிக்கு சக்திவேல் ஆற்றிய பங்கை கவுரவிக்கும் விதமாக, மத்திய அரசுகடந்த 2009-ம் ஆண்டு அவருக்கு பத்ம விருது இவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்