இந்திய கடல்சார் உச்சி மாநாட்டில் 12 ஒப்பந்தங்களுக்கு கையெழுத்து காமராஜர் துறைமுகத் தலைவர் தகவல்

By செய்திப்பிரிவு

இந்திய கடல்சார் உச்சிமாநாட்டில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான 12 ஒப்பந்தங்கள் செய்யப்பட உள்ளதாக, காமராஜர் துறைமுகத்தின் தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்தார்.

இதுகுறித்து, சுனில் பாலிவால் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் சார்பில், கடல்சார் இந்தியா மெய்நிகர் உச்சி மாநாடு-2021, வரும் மார்ச்2 முதல் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிரதமர் மோடி, இந்த மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் பங்கேற்க இதுவரை 45 ஆயிரம்முன்பதிவு செய்து உள்ளனர். உள்நாடு மட்டும் வெளிநாடுகளைச் சேர்ந்த 82 வல்லுநர்கள் உரையாற்ற உள்ளனர்.

இந்த மாநாட்டில் காமராஜர் துறைமுகம் சார்பில், ரூ.2 ஆயிரம்கோடி மதிப்பிலான 12 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உள்ளன. இந்தியன் ஆயில் நிறுவனம், ரெனால்ட் நிசான், டைம்லர் உள்ளிட்ட நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

காமராஜர் துறைமுகத்தில் மொத்தம் 22 கப்பல் நிறுத்தும் தளங்கள் அமைப்பதற்கான வசதி உள்ளது. தற்போது, 8 கப்பல் நிறுத்தும் தளங்கள் செயல்பாட்டில் உள்ளன. மேலும், 3 தளங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு சுனில் பாலிவால் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்