தி.மலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை

By செய்திப்பிரிவு

தி.மலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு தளர்வு களுடன் வரும் 28-ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தாலும் கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

தற்போதைய சூழலில் பவுர்ணமி கிரிவலம் வருவதற்கு அனுமதி அளித்தால், பிற மாநிலங் களில் இருந்து வரும் பக்தர்கள், பொதுமக்களால் மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே, பொதுமக்கள் நலன் கருதி தி.மலை பவுர்ணமி கிரிவலம் நடைபெறும் வரும் 26-ம் தேதி (நாளை) பிற்பகல் 3.49 மணி முதல் 27-ம் தேதி (நாளை மறுதினம்) பிற்பகல் 2.42 மணி வரை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கிரிவலம் செல்வதற்கு வர வேண்டாம்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்