திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் மாற்றுத்திறனாளிகள் 80 பேர் கைது

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் நேற்று குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் 80 பேரை போலீஸார் கைது செய்தனர்.

புதுச்சேரி, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ளது போல, தமிழகத்திலும் மாதாந்திர உதவித் தொகையாக மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.3,000, கடும் பாதிப்பு உள்ள மாற்றுத்தி றனாளிகளுக்கு ரூ.5,000 வீதம் வழங்க வேண்டும். தனியார் துறை வேலைவாய்ப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத பணி யிடங்களை தமிழக அரசு உறுதி செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர், தமிழகம் முழுவ தும் மாவட்ட ஆட்சியர் அலுவல கங்களில் நேற்று குடியேறும் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்.

அதன்படி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சங்கத்தின் மணிகண்டம் ஒன்றியச் செயலாளர் ஏ.ஆரோக்கியராஜ் தலைமையில் நேற்று மாற்றுத்தி றனாளிகள் திரண்டனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெ.ஜெயபால், மாவட்டச் செயலாளர் எம்.கோபிநாத், மாநில துணைச் செயலாளர் சி.புஷ்பநாதன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் நோக்கிச் சென்ற வர்களை போலீஸார் தடுத்து நிறுத் தினர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் 80 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குடியேறும் போராட்டத்துக்கு, சங்கத்தின் திருச்சி புறநகர் மாவட்டத் தலைவர் குமார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் தனராஜ், வெங்கடசுப்பிரமணியம் உள்ளிட்ட ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

இதுபோல, அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குடியேறும் போராட் டத்துக்கு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்டச் செயலாளர் கணேசன் தலைமை வகித்தார்.

ஒன்றியத் தலைவர் ராஜிவ் காந்தி, விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றியத் தலைவர் ஆறுமுகம், ராஜாமுகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாகை வட்டாட்சியர் அலுவலகத்தில் சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையிலும், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கணேசன் தலைமையிலும் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்