கரும்புக்கான கூடுதல் விலையை உடனே அறிவிக்க வேண்டும் தமிழக அரசுக்கு கரும்பு விவசாயிகள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

2020-21 ஆண்டுக்கு கரும் புக்கான கூடுதல் விலையை தமிழக அரசு உடனே அறிவிக்க வேண்டும் என பெரம்பலூர் சர்க்கரை ஆலை அனைத்து கரும்பு விவசாயிகள் சங்க கூட் டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூர் சர்க்கரை ஆலை அனைத்து கரும்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூட்டம், கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் மு.ஞானமூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், காலி யாக உள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி பணியிடத்துக்கு திறமையும், நேர்மையும் மிக்க ஒருவரை பணி நியமனம் செய்து, பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கியும், காலிப்பணியிடத்தை நிரப்பியும் ஆலையை திறம்பட இயக்க வேண்டும். 2020-21 ஆண்டுக்கு மாநில அரசு கரும்புக்கான கூடுதல் விலையை உடனே அறிவிக்க வேண்டும். கரும்பு சாகுபடிக்கு சொட்டுநீர் பாசன முறை பயனற்றது என வேளாண்மை பல்கலைக் கழகம் அறிவித்தும், அந்தத் திட்டத்தை கரும்பு விவசாயிகளிடம் திணிப் பதை உடனே கைவிட வேண்டும். கரும்புக்கான வெட்டுக்கூலியை அரசே ஏற்க வேண்டும்.

விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் வாங்கிய பயிர்க் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் டீசல் மற்றும் பெட்ரோல் மீது போடும் அதிகமான வரிகளை குறைத்து குறைந்த விலையில் டீசல், பெட்ரோல் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ஏ.கே. ராஜேந்திரன், பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் சீனிவாசன், கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ந.ப.அன்பழகன், காங்கிரஸ் கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ஆ.பெருமாள், பங்குதாரர்கள் சங்கத் தலைவர் டி.கே.ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்