சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் உலகத்தாய்மொழி நாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.
பல்கலைக்கழக கல்வி வளர்ச்சி மைய இயக்குநர் பேராசிரியர் சேகர் தலைமை தாங்கினார். இந்திய மொழிப்புல முதன்மையர் பேராசிரியர் முத்துராமன் முன்னிலை வகித்தார். தமிழியல் துறைத் தலைவர் பேராசிரியர் வெங்கடேசன் வரவேற்று பேசி னார்.
இதில் பல்கலைக்கழக கல்வி வளர்ச்சி மைய இயக்குநர் பேராசிரியர் சேகர் பேசுகையில், ‘‘தமிழ்மொழி பன்நெடுங்காலமாக வாழும் மொழி, தமிழ்ச் சான்றோர்கள் வளர்த்த மொழி. உயிரோடு வளர்ந்த இம்மொழியை இன்னும் பலஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என்றால் அம்மொழியை நாம் கற்பதும், காப்பதும் நம் கடமை. மொழி நீண்ட நாள் வாழவும் ,வளரவும் , நாம் செய்யவேண்டியது தமிழில் பெயர் சூட்டுதல், பிறமொழி கலக்காமல் பேசுவது என்று ஒவ்வொரு செயலிலும் தமிழ், தமிழ் என்று வாழ்ந்துகாட்டுவோம்’’ என்றார். பேராசிரியர் பிலவேந்திரன் நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பிற துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள் சரண்யா, ரவிச்சந்திரன், அருள், செல்வராஜ், துளசிராமன் மற்றும்அம்பேத்கர் இருக்கை ஒருங்கி ணைப்பாளர் சௌந்தர்ராஜன், ராதிகாராணி ஆகியோரும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் அரங்கபாரி, செந்தில்குமார், சதாசிவம், தமிழ்த்துறை ஆய்வு மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் கட்டுரைப் போட்டி, கவிதைப்போட்டி, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும், நூலும் பரிசாக வழங்கப் பட்டது. மேலும், இந்நிகழ்வில் மாணவ, மாணவிகள் தமிழ்மொழி யில் பேசுவோம், எழுதுவோம் கையொப்பம் இடுவோம் என்று உறுதி மொழி ஏற்றனர்.
பிறமொழி கலக்காமல் பேசுவது என்று ஒவ்வொரு செயலிலும் தமிழ், தமிழ் என்று வாழ்ந்துகாட்டுவோம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago