தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் வீ.கோவிந்தராஜூலு வெளியிட்ட அறிக்கை:
திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் அரியமங்கலம் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை அமைப்பதற் காக சாலையின் இருபுறமும் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்கூடங்கள், கல்வி நிறுவனங் கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கட்டிடங்களை இடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதை தடுத்து நிறுத்தக் கோரியும், மாற்று ஏற்பாடாகவும், நிரந்தர தீர்வாகவும் பறக்கும் சாலை(உயர் மட்ட சாலை) அமைக்க வலியுறுத்தியும், பாதிக்கப்பட்டோர் கூட்டமைப்பு சார்பில் பிப்.9-ம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிப்.16-ம் தேதி கடைகளில் கருப்பு கொடியேற்றும் போராட்டம் நடைபெற்றது.
ஆனாலும், உரிய நடவடிக்கை எடுக்காததால், அடுத்தக்கட்ட போராட் டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அதன்படி, பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை பிப்.23-ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பும், அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காட்டூர் சந்தோஷ் மகால் அருகே உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற உள்ளது.
எனது தலைமையில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சிறப்புரையாற்றவுள்ளார்.
சாலை விரிவாக்கப் பணியால் பாதிக்கப்படுபவர்கள், கடைகள், வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் என அனைவரும் இந்த போராட்டத்தில் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டுகிறேன்.
இதற்கு பின்னரும் உரிய தீர்வு ஏற்படாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு, அரசின் அடையாள சான்றுகளை திரும்ப ஒப்படைப்பது உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago