ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி பிப்.22-ல் அதிமுக சார்பில் 140 ஜோடிகளுக்கு திருமணம்

By செய்திப்பிரிவு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட அதிமுக சார்பில் 140 ஜோடிகளுக்கு பிப்.22-ம் தேதி காலை 9.30 மணிக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட உள்ளது. இந்த விழாவில், அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமை வகிக்கிறார். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி எம்.பி, ஆர்.வைத்திலிங்கம் எம்.பி, மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் பங்கேற்று, திருமணங்களை நடத்தி வைக்கின்றனர்.

திருமணம் செய்து கொள்ளவுள்ள மணமக்களுக்கு, அதிமுக சார்பில் தங்கத் தாலி, பட்டுச்சேலை, வேட்டி, கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. மேலும், மணமக்களின் குடும்பத்தார் மற்றும் நிர்வாகிகளுக்கு காலை உணவு மற்றும் மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 140 ஜோடிகளுக்கு திருமண விழா நடைபெறுவதை முன்னிட்டு, பிரம்மாண்ட பந்தல் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்