கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவால் மா மரங்களில் பூக்கள் கருகல், பூச்சித் தாக்குதல் அதிகரிப்பு

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவால், மா மரங்களில் பூக்கள் கருகல், பூச்சித் தாக்குதல் அதிகரித் துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டில் பரவலாக பெய்த மழையால் மாமரங்களில் அதிகளவில் பூக்கள் பூத்துள்ளன. இந்நிலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக மா மரங்களில் பூக்கள் கருகி வருவதாகவும், பூச்சித் தாக்குதல் அதிகரித்துள்ளதாகவும் மா விவசாயிகள் வேதனை தெரிவித் துள்ளனர்.

இதுதொடர்பாக மா விவசாயிகள் கூட்டு நடவடிக்கைக் குழுவின் செயலாளர் சவுந்திரராஜன் கூறிய தாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சத்து 52 ஆயிரத்து 436 மெட்ரிக் டன் மா உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது பனிப்பொழிவு காரணமாக மாம்பூக்கள் கருகி வருகின்றன. மேலும் தேன்வண்டு காரணமாக ருமேனியா, ஒட்டு, செந்தூரா ஆகிய மா வகைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கடும் பனிப்பொழிவால் பங்கனப்பள்ளி, நீலம், மல்கோவா, இமாம் பஸந்த்ஆகிய மா மரங்களில் பூக்கள் குறைவாக காணப்படுகின்றன. இதனால் விளைச்சல் பாதிக்கும் நிலை உள்ளது.

தேன்வண்டு என அழைக்கப்படும் தத்துப்பூச்சி தாக்குதலால் மாமரங்களில் பிஞ்சுகள் கருகி கொட்டுகின்றன. இதனை தவிர்க்க தோட்டக் கலைத்துறையினர், விவசாயி களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கு வதில்லை. குறிப்பாக, கடந்த மாதம் காணொலி மூலம் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மா மரங்களில் பனியால் அதிகரித்து வரும் பூக்கள் கருகல், பூச்சித் தாக்குதல் குறித்தும், உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால், இதுவரை எவ்வித ஆலோசனையும் வழங்கப்பட வில்லை.

இதனால், தனியார் உரக்கடைகளில் மரங்களில் உள்ள நோய்கள் குறித்து நாங்கள் எடுத்துக்கூறி மருந்துகளை வாங்கித் தெளிக்க வேண்டிய நிலை நீடிக்கிறது. இனியாவது,பூச்சித் தாக்குதல், பனிப்பொழிவு இவற்றிலிருந்து மா விவசாயத்தை பாதுகாக்க விவசாயிகளுக்கு தகுந்த ஆலோ சனைகளை தோட்டக் கலைத்துறை அலுவலர்கள் வழங்க வேண்டும்,’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்