திருவாரூரில் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்த 3 வயது பெண் குழந்தை மீட்கப்பட்டு, குழந்தைகள் காப்பகத்தில் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
திருவாரூர் மேலவீதியில் மூன்று வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஆதரவின்றி தனியாக சுற்றித் திரிந்தது. இந்தக் குழந்தையை மீட்ட அப்பகுதி மக்கள், திருவாரூர் நகர காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அந்தக் குழந்தை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உரிய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, குழந்தைகள் நலக் குழுமத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர், அரியலூர் ஏலாக்குறிச்சியில் உள்ள அரசு அனுமதி பெற்ற குழந்தைகள் காப்பகத்தில் குழந்தை சேர்க்கப்பட்டது. இந்நிகழ்வில், குழந்தைகள் நலக் குழுத் தலைவர் ஜீவானந்தம், உறுப்பினர் பாஸ்கர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவ லர் முத்தமிழ்செல்வி, குழந்தை கள் காப்பக நிர்வாகி சரிதா உட்பட பலர் பங்கேற்றனர்.
குழந்தையின் பெற்றோர் குறித்து திருவாரூர் நகர போலீ ஸார் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago