மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிகளை தேர்வு செய்யும் ஊராட்சி மன்ற தலைவர்களின் உரிமையில் அரசியல் தலையீடு உள்ளதாக கூறி ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு மனு அளித்துள்ளனர்.
மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஏழுமலை, மாவட்டத் தலைவர் கணேசன் உள்ளிட்ட வர்கள் அளித்துள்ள மனுவில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை அட்டை வழங்கல், பணிகளை தேர்வு செய்தல், சமூக தணிக்கை, பதிவேடு பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் ஊராட்சி மன்றம் மூலம் செயல் படுத்தப்பட வேண்டும். ஊராட்சி செயலாளர் மூலம் பணி உத்தரவு வழங்கப்படும்.
இந்நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளை தேர்வு செய்வதில் ஒன்றியக் குழுத் தலை வர், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் தலையீடு அதிகளவில் உள்ளது. இது, ஊராட்சி மன்ற தலைவர்களின் உரிமையை பறிக்கும் செயலாகும். இதுகுறித்து விசாரணை நடத்தி, ஊராட்சி மன்ற தலைவர் மூலமாக பணிகளை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
14-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ஊராட்சி மன்ற தீர்மானம் இல்லாமல் கிராம சாலை கள் அமைக்கக்கூடாது எனக் கூறி உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதனால், நமது மாவட்டத்தில் அதற் கான பணம் செலவிடப்படாமல் உள்ளது. எனவே, ஊராட்சி மன்ற தீர்மானத்தின் அடிப் படையில் புதிய சாலை பணிகளை தேர்வு செய்ய ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago