கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஊதிய உயர்வு உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பொதுவிநியோக திட்டத்திற்கு தனித்துறை உருவாக்க வேண்டும். ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் ஊதிய குழு அமைத்து நடப்பாண்டில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் செய்யப்பட வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். கரோனா தொற்றால் இறந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும். பயோ மெட்ரிக் முறையில் பொருட்களை விநியோகம் செய்வதில் ஏற்படும் நெட்வொர்க் மற்றும் சர்வர் பிரச்சினைகளை சீர்செய்ய வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் பழைய ஆட்சியர் அலுவலகம் எதிரே கடலூர் அரசு பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் சரவணன் தலைமையில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதேபோல் கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கத் தலைவர் மாயவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago