நூல் ஏற்றுமதியை கட்டுப்படுத்த வலியுறுத்தி திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தீர்மானம்

By செய்திப்பிரிவு

நூல் விலை உயர்வு, தடையில்லாமல் நூல் கிடைப்பதற்காக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த அவசர ஆலோசனைக் கூட்டம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் விஜயகுமார் உட்பட பலர்பங்கேற்றனர். ஜவுளி உற்பத்திநிறுவனங்களின் நலன் கருதி, நூல்ஏற்றுமதியை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் உயர்மட்ட குழுஅமைக்கப்பட்டு, அக்குழு மூலமாக நூற்பாலைகள் சங்கங்களை அணுகி, நூல் விலையை உடனடியாக குறைக்க வேண்டுமென வலியுறுத்துவது, தங்குதடையின்றி நூல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறுகிய காலத்தில் நூல் விலையை உயர்த்த வேண்டாம் என வலியுறுத்துவது, ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் புதிய சிறப்புகுழு உருவாக்கப்பட்டு, நூல் கொள்முதலில் வரும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுப்பது, ஜாப் ஒர்க் மற்றும்இதர மூலப்பொருட்களின் விலை உயர்வை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என அனைத்துசங்கங்களிடம் வலியுறுத்துவது, இந்த அசாதாரண சூழ்நிலையை கருத்தில்கொண்டு, உற்பத்தியாளர்களுக்கு கேட்கும் விலை உயர்வை கொடுக்க வேண்டும் எனவெளிநாட்டு இறக்குமதியாளர்களிடம் கோரிக்கை விடுப்பதுஎன்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்