கோடை சீசனுக்கு தயாராகும் தாவரவியல் பூங்கா 5 லட்சம் மலர்ச் செடிகள் நடும் பணி தீவிரம்

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம். உதகை அரசு தாவர வியல் பூங்காவில் வரும் மே மாதம் 124-வது மலர்க் கண்காட்சி நடக்கிறது. இதற்காக பாத்திகள், நடைபாதை ஓரங்கள், மரங்களை சுற்றிலும் மலர்ச் செடிகள் நடவு செய்யும் பணி கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. நீண்ட மற்றும் குறுகிய வாழ்நாட்களை கொண்ட மலர் செடிகள் ஏப்ரல் மாதத்தில் பூக்கும் வகையில் தனித்தனியாக நடவு செய்யப்பட்டு வருகின்றன.

சால்வியா, டெல்பீனியம், சைக்லமன், சினரேரியா, ரனுன்குலஸ், கேலா லில்லி, டேலியா, பிகோனியா, இன்கா மேரிகோல்டு, பிளாக்ஸ், பிரிமுலா, ஜினியா, ஆன்டிரைனம், வயோலா, லைமோனியம், கலிபோர்னியா பாப்பி, நிமேசியா உட்பட பல்வேறு ரகங்களைச் சேர்ந்த 5 லட்சம் மலர்ச் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன.

கோடை சீசனுக்கு பூங்காவை தயார் செய்யும் வகையில், உரம் இடுவது, களை பறிப்பது, தண்ணீர் தெளிப்பது போன்ற பராமரிப்புப் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விதைகள் விதைக்கப்பட்டு, சிறிய நாற்றுகளாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. கோடை சீசன் மற்றும் மலர்க் கண்காட்சிக்கு 10,000 பூந்தொட்டிகளில் மண் நிரப்பி மலர்ச் செடிகளை நடவு செய்யும் பணி நடந்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்