தேசிய வங்கிகளில் பயிர்கடனை ரத்து செய்ய கோரிக்கை முதல்வரிடம் விவசாயிகள் சங்கத்தினர் மனு

By செய்திப்பிரிவு

தேசிய வங்கிகளில் விவசாயி களின் பயிர்கடனையும் டிராக்டர் கடனையும் ரத்து செய்ய முதல் வரிடம் விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

வேலூரில் தேர்தல் பிரச் சாரத்துக்கு வந்த தமிழக முதல்வர் பழனிசாமியை தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது, விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடனை ரத்து செய்த முதல் வரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்தவர்கள், ‘‘தேசியவங்கிகளில் விவசாய பயிர்க் கடனையும், டிராக்டர் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

முன்பதிவு செய்த விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின் இணைப்பு வழங்கி தட்கல் முறையை ரத்து செய்ய வேண்டும். தென்பெண்ணை பாலாறு நதிகள் இணைப்புக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும்.

பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகளிடம் இருந்து விவசாய பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். அப்போது, மாநில போராட்ட குழு தலைவர் ரகுபதி, மாநில செயலாளர் உதயகுமார், மாநில இளைஞர் அணி தலைவர் சுபாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்