கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரில் செயல்பட்டு வந்த கரோனா வார்டு கட்டிடத்தை கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைக் கவி்லை. இதனால் இடவசதி இல்லாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
கடலூர் தேவானம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக் கல்லூரியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இக்கல்லூரி கரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வந்தது. இதற்காக வகுப்பறைகளில் இருந்த டெஸ்க் மற்றும் பெஞ்சுகளை வெளியே எடுத்து போட்டனர். அதுமழை, வெயிலில் கிடந்து வீணாகியுள்ளது. தற்போது கரோனாவார்டு இயங்கவில்லை. வார்டு பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டுகல்லூரி நிர்வாகத்திடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். ஆனால் நேற்று வரை மாவட்ட நிர்வாகம் இதனை ஒப்படைக்க வில்லை. இந்த நிலையில் நேற்று கல்லூரி திறக்கப்பட்டது. வகுப்புகளுக்கு இட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மரத்தடியில் மாணவ, மாணவிகள் அமர வைக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன. இடப்பற்றாக்குறை காரணமாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு திங்கள், வியாழன் கிழமையும் வகுப்புகள் நடைபெறும். இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமையும், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு புதன்,சனிக் கிழமையும் என சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கரோனா வார்டை சுத்தம் செய்து மீண்டும் வகுப்பறைகளாக பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago