கரோனா முடக்கத்திற்கு பிறகு 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. விழுப்பரம், கடலூர், கள்ளக் குறிச்சி மாவட்டங்களில், மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் நேற்று பள்ளிக்கு வருகை புரிந்தனர். விழுப்புரம் மாவட் டத்தில் உள்ள 385 பள்ளி களில் 9-ம் வகுப்பில் 25,788 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். பிளஸ் 1 வகுப்பில் 21,056 பேர் பயில்கின்றனா். இதில் 9-ம் வகுப்பு மாணவ, மாணவிகளில் 71 சதவீதமும், ப்ளஸ் 1 வகுப்பு மாணவ, மாணவிகளில் 79 சதவீதமும் நேற்று பள்ளிக்கு வருகை புரிந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 480 பள்ளிகளில் 9-ம் வகுப்பில் 36,880 பேர் பயில்கின்றனர். பிளஸ் 1 வகுப்பில் 31,015 பேர் பயில்கின்றனா். 9-ம் வகுப்பு மாணவ,மாணவிகள் 63 சதவீதமும், ப்ளஸ் 1 மாணவ, மாணவிகள் 70 சதவீதமும் நேற்று பள்ளிக்கு வருகை புரிந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 241 பள்ளிகளில் 9- ம் வகுப்பில் பயிலும் 22,961 மாணவ, மாணவிகளில் 63 சதவீதம் பேர் நேற்று பள்ளிக்கு வருகை புரிந்தனர். இதே போல் ப்ளஸ் 1 பயிலும் 19,597 மாணவ, மாணவிகளில் 73 சதவீதம் பேர் நேற்று வருகை புரிந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago