வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சசிகலாவுக்கு தொண்டர்கள் வரவேற்பு

By செய்திப்பிரிவு

வேலூர், ராணிப்பேட்டை மாவட் டங்களில் கலை நிகழ்ச்சிகளுடன் சசிகலாவுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு நேற்று காலை காரில் புறப்பட்ட சசிகலாவை வழிநெடுகிலும் வரவேற்க அமமுக தொண்டர்கள் உற்சாகமாக திரண்டிருந்தனர். மேலும், ஒவ்வொரு மாவட்டங்களிலும் கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேள தாளத்துடன், செண்டை மேளம், டிரம்ஸ், புலியாட்டம், இசை கச்சேரி என 8 வகையான கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடிக்கு நேற்றிரவு 7.30 மணியளவில் சசிகலாவின் கார் கடந்து செல்ல வேலூர் சரக டிஐஜி காமினி தலைமையிலான காவலர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய் தனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காவல் துறையினர் இரும்பு தடுப்புகளை சாலையின் குறுக்கே வைத்தனர். இதனால், அமமுக தொண்டர்கள் மற்றும் காவல் துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பெங்களூருவில் இருந்து புறப்பட்டு சுமார் 13 மணி நேரம் பயணத்துக்குப் பிறகு நேற்றிரவு 8 மணியளவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தடைந்தார். அமமுக நெல்லை மண்டல பொறுப்பாளர் மாணிக்கம் ராஜா தலைமையில் திரண்டிருந்த தொண்டர்கள் சசிகலாவின் காருக்கு பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா சுங்கச்சாவடி யில் அமமுக மண்டல பொறுப்பாளர் என்.ஜி.பார்த்தீபன் தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.கோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் கலை நிகழ்ச்சிகளுடன் சசிகலா வுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்