பணியின்போது உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிதி உதவி காக்கி உதவும் கரங்கள் ஏற்பாடுஉயிரிழந்த காவலர் அழகுமலையின் குடும்பத்தினருக்கு ரூ.15.56 லட்சம் நிதி உதவியை வழங்கிய ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் மற்றும் போலீஸார்.

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த காவலருக்கு, காக்கி உதவும் கரங்கள் சார்பில் ரூ.15.56 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் அழகுமலை 17.12.2020-ல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அழகுமலை குடும்பத்தினருக்கு உதவி செய்ய அவருடன் 2011-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் ஒன்றிணைந்து காக்கி உதவும் கரங்கள் சார்பாக ரூ.15,56,546 நிதி திரட்டினர். இந்த நிதியை நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், அழகுமலை குடும்பத்தினரிடம் வழங்கினார்.

இதில் அழகுமலையின் குழந்தைகள் மது(5), கிருஷ்ணன்சஞ்சய்(4) ஆகிய இருவரின் பெயரில் ரூ.13,52,546 எல்ஐசியில் வைப்பீடு செய்யப்பட்டது. அவரது மனைவி கிரிஜாதேவியிடம் ரூ.1,02,000, தாயார் வில்வகனியிடம் ரூ.1,02,000-க்கான காசோலைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், டிஎஸ்பிக்கள், 2011-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்