தஞ்சாவூர் மாவட்ட வருவாய்த் துறையில் தொடர்ந்து ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்களை இடமாற்றம் செய்ய கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்ட வருவாய்த் துறையில், தொடர்ந்து 3 ஆண்டு களுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றுபவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் தஞ்சாவூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் என்.வெங்கடாசலம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கா.முருகக்குமார் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் சி.ராதா, சங்க ஆலோச கர்கள் தரும.கருணாநிதி, சக்கர வர்த்தி, ஆர்.செல்வராஜ், மகளிர் அணி நிர்வாகி ஆர்.மாதவி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், அரசுப் பணியாளர் களுக்கு வழங்க வேண்டிய 21 மாத கால நிலுவைத் தொகையை உடன டியாக வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 2 லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசுப் பணியில் அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்து, அனைவருக்கும் உடனடியாக காலமுறை ஊதியமும், ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமும் வழங்க வேண்டும்.

தஞ்சாவூர் மாவட்ட வருவாய்த் துறையில் தொடர்ந்து 3 ஆண்டு களுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிபவர்களை உடனடியாக பணி மாறுதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE