பள்ளி மாணவர்களின் செயற்கைக் கோள் தயாரிப்பு குழுவில் இடம் பெற்றுள்ள பென்னாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களை, வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் பாராட்டி னார்.
ராமேஸ்வரத்தில் இருந்து முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவாக பள்ளி மாணவர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள எடை குறைந்த 100 மிகச்சிறிய செயற் கைக்கோள்கள் நாளை (7-ம் தேதி) விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை கின்னஸ் உள்ளிட்ட 5 முக்கிய சாதனைகளாக நிகழ்த்தவும் ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. செயற்கைக் கோள் தயாரிப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில், வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 2 மாணவர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த பள்ளியின் பிளஸ் 2 மாணவர் தேவேந்திரன், பிளஸ் 1 மாணவர் கவுதம் ஆகியோர் செயற்கைக்கோள் தயாரிப்பு குழுவில் இடம் பெற்றுள்ளனர். செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தும் நிகழ்ச்சியை நேரில் பார்ப்பதற்காக இவர்கள் இருவரும் இன்று (பிப்.6) ராமேஸ்வரம் புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.
இந்நிலையில், செயற் கைக்கோள் தயாரிப்பு குழுவில் இடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் இருவரும், வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரனை நேற்று சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். செயற்கைக்கோள் தயாரிப்பு குறித்தும் அது தொடர்பான பயிற்சிகள் குறித்தும் முதன்மை கல்வி அலுவலரிடம் மாணவர்கள் விளக்கினர். அப்போது, வேலூர் கல்வி அலுவலர் அங்குலட்சுமி, பென்னாத்தூர் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் உமாநாதன், ஆசிரியை கோட்டீஸ்வரி ஆகி யோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago