இயற்கை மருத்துவ ஆய்விருக்கை பணிக்காக சுசான்லி குழும தலைவருக்கு பாராட்டு

By செய்திப்பிரிவு

இயற்கை மருத்துவ ஆய்விருக்கை பணிக்காக கடலூர் சுசான்லி குழு மத்தின் சேர்மன் டாக்டர் ரவியை தமிழக துணை முதல்வர் பாராட்டி கவுரவித்தார்.

சென்னை தரமணியில் தமிழ்த்தாய் தமிழாய்வு பெருவிழாவின் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் மற்றும் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்கு நரான விஜயராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை தரமணியில் உள்ளஉலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உலக தமிழாராய்ச்சி நிறுவனத் தின் செயல்படும் பல்வேறு ஆய்வி ருக்கைகளில் தமிழ் (இயற்கை) மருத்துவ ஆய்விருக்கையும் ஒன் றாகும். இதன் பொறுப்பாளராக கடலூர் சுசான்லி குழுமத்தின் இணை சேர்மன் பேராசிரியை உஷா உள்ளார். தலைமை ஒருங்கிணைப்பாளராக கடலூர் சுசான்லிகுழுமத்தின் சேர்மன் டாக்டர் ரவிஉள்ளார். இயற்கை (மருத்துவ) ஆய்விருக்கையின் சிறப்பான செயல்பாட்டிற்காக கடலூர் சுசான்லி குழுமத்தின் சேர்மன் டாக்டர் ரவிக்கு, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சால்வை போர்த்தி கவுரவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்