சிவகங்கை மாவட்டத்தில் ரூ.1,752 கோடியில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைக் காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் சில பகுதிகள் பயன்பெற்று வருகின்றன. மற்ற பகுதிகளுக்கும் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென கோரிக்கை எழு ந்தது. இதையடுத்து சிவகங்கை மாவட்டத்துக்குத் தனியாக காவிரி கூட்டுக் குடிநீர்த் திட் டத்தை செயல்படுத்த 2013-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் இத்திட்டத்தை குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.1,752.73 கோடியில் செயல்படுத்த நடவடிக்கை எடுக் கப்பட்டது. இத்திட்டத்தை முதல்வர் பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
சிவகங்கையில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் லதா, குடிநீர் வடி கால் வாரிய கண்காணிப்புப் பொறியாளர் குணசேகரன், செயற் பொறியாளர்கள் அயினான், தங்கரத்தினம் பங்கேற்றனர்.
புதிய காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 11 ஒன்றியங்களில் உள்ள 2,452 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும். இத்திட்டத்துக்கு நபார்டு வங்கி ரூ.1,537.59 கோடி நிதி உதவி அளிக்கிறது. மாநில அரசு பங்களிப்பாக ரூ.215.14 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இப் பணி 4 கட்டங்களாக நடக்க உள்ளது. இதன்மூலம் 11.39 லட்சம் மக்களுக்கு தினமும் 49.83 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago