ஓவியப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும், பிப்.2-ம் தேதி உலக ஈர நில தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்ட வனத் துறை சார்பில், நிகழாண்டு உலக ஈர நில தினத்தையொட்டி, மாணவர்களிடம் விழிப்புணர்வு மற்றும் ஈர நிலம் தொடர்பான புரிதலை ஏற்படுத்தும் வகையில், ஆன்லைனில் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்ட வனத்துறை அலுவலகத் தில் அண்மையில் நடைபெற்ற உலக ஈர நில தினம் விழாவில், மாவட்ட வன அலுவலர் மு.இளையராஜா, வன விலங்கு உயிரியலாளர் ராம் மனோகர், அருகணூயிர் அறக்கட்டளைத் தலைவர் சதீஷ், ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின்னர், ஏற்கெனவே நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, மாவட்ட வன அலுவலர் இளை யராஜா பரிசுகளை வழங்கினார். தஞ்சாவூர் மாவட்ட வன விரிவாக்க மைய அலுவலர் வடிவேல், தஞ்சாவூர் வனச் சரக அலுவலர் ஜோதிகுமார் ஆகி யோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE