உலக புற்றுநோய் விழிப்புணர்வு தின சைக்கிள் பிரச்சார பயணம்

By செய்திப்பிரிவு

உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, திருவாரூரிலிருந்து நன்னிலம் வரை நேற்று விழிப்புணர்வு சைக்கிள் பிரச்சாரப் பயணம் நடை பெற்றது.

இந்த விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தில், திருவாரூர் தன்னார் வலர் குணசேகரன் தலைமையில் 18 மாணவ, மாணவிகள் உட்பட 25 பேர் பங்கேற்றுள்ளனர். தொடக்க நிகழ்ச்சிக்கு, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்டச் செயலாளர் ஜெ.வரதராஜன் தலைமை வகித்தார்.

வள்ளலார் குருகுலம் பள்ளி தாளாளர் மூ.சு.பாரி, இன்னர்வீல் கிளப் தலைவர் அருணா உட்பட சேவை சங்க நிர்வாகிகள் முன்னிலையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெ.முத்துக்குமரன் விழிப்புணர்வு சைக்கிள் பிரச்சார பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

புற்றுநோய் குறித்து கிராமப்புற பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடை பெற்ற இந்த பிரச்சார பயணம் முதல்கட்டமாக திருவாரூ ரிலிருந்து நன்னிலம் வரை நடைபெற்றுள்ளது. 2-ம் கட்டமாக திருவாரூர் முதல் மன்னார்குடி வரையும், 3-ம் கட்ட மாக திருவாரூர் முதல் கும்ப கோணம் வழியாக திருச்சி வரையும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்