தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருது, வேடம்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் அரசுப் பள்ளிகளுக்கு பள்ளி கல்வித் துறை சார்பில் சிறந்த பள்ளிகளுக்கான விருதுகளை வழங்கி வருகிறது. 2018-2019 கல்வி ஆண்டுக்கான விருதுகள் அண்மையில் அறிவிக் கப்பட்டுள்ளன.
இதில், தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருது, திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் வேடம்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கும் வழங்கப் பட்டுள்ளது. இந்த விருதை வலங் கைமான் வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயலட்சுமி மற்றும் வேடம்பூர் பள்ளி ஆசிரியர்களிடம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன் நேற்று ஒப்படைத்தார்.
விவசாய கூலித் தொழி லாளர்கள் அதிகம் வசிக்கும் வெட்டாறு கரையோரம் சுற்றிலும் வயல்வெளிகளுக்கு நடுவில் அமைந்துள்ளது வேடம்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில் வேடம்பூர், சாரநத்தம், மாணவூர், கொக்கலாடி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து 140-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு 7 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
இந்தப் பள்ளி அமைந்துள்ள கிராமத்துக்கு பேருந்து வசதிகள் கூட சரிவர இல்லாத நிலையிலும், கடந்த 10 ஆண்டுகளில் ஆசிரி யர்களின் ஒத்துழைப்பால் இப் பள்ளி சிறப்பான வளர்ச்சியை எட்டியுள்ளது.
கரோனா ஊரடங்குக்கு முன்பிருந்தே இப்பள்ளியில் 5 ஆண்டுகளாக ஸ்மார்ட் கிளாஸ் மூலம் ஆன்லைன் வகுப்புகள், கணினி ஆய்வகம், திருக்குறள் பயிற்சி, கிராம கல்வி மேம்பாடு, கல்வி உதவித்தொகைக்கான போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி, பெண் குழந்தைகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தொடக்க வகுப்புகள் முதல் எளிய விளக்கங்களுடன் அறிவியல் கல்வியும், ஃபொனடிக் முறையில் ஆங்கில பாடங்களும் சிறப்பாக கற்பிக்கப்படுகின்றன. இதனால், தனியார் பள்ளிகளில் படித்து வந்த மாணவர்கள், அங்கிருந்து விலகி இப்பள்ளியில் சேர்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து பள்ளியின் தலை மையாசிரியர் ஞா.தேன்மொழி கூறியது: ஏற்கெனவே 3 முறை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் இன்ஸ்பயர் விருதைப் பெற்றுள் ளோம். தற்போது, இந்த விருதை தமிழக அரசு எங்கள் பள்ளிக்கு வழங்கியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
கிராமப்புற மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், எங்கள் பள்ளியின் ஆசிரியர்கள் ஒற்றுமையாக செயல்பட்டதால் இந்த விருது சாத்தியமாகியுள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago