திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே ராமநாதபுரம் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. விவசாயியான இவர், திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவர், கடந்த 2018-ம் ஆண்டில் 13 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததால், அந்தச் சிறுமி கர்ப்பமடைந்தார். அந்த கர்ப்பத்தையும் மருந்து கொடுத்து கலைத்துள்ளார். இதையறிந்த சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில், திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, மூர்த்தியை கைது செய்தனர்.
திருவாரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், அரசு தரப்பில் வழக்கறிஞர் மல்லிகா ஆஜரானார். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். இதில், சிறுமியை பலாத்காரம் செய்ததற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம், கொலை மிரட்டல் விடுத்ததற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம், பலமுறை அத்துமீறி சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்ததற்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், கருச்சிதைவு செய்ததற்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் என மொத்தம் 23 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.23 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த சிறைத் தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago