திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், ரூ.40 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மண்டல புற்றுநோய் சிகிச்சை மையத்தை, சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு இந்த மையம் அமைக்க முதற்கட்டமாக ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டது. பின்னர், படிப்படியாக நிதி ஒதுக்கப்பட்டு மொத்தம் ரூ.40 கோடி மதிப்பில் கட்டிடங்களும், புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் நவீன கருவிகளும் அமைக்கப்பட்டன. மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு, மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரன், துணை முதல்வர் சாந்தாராம், துறை தலைவர் தெய்வநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மையத்தில் ரூ.22 கோடி மதிப்பிலான லீனியர் அக்ஸிலேட்டர் கருவி, ரூ.4 கோடி மதிப்பில் டிஜிட்டல் கோபால்ட் டெலிதெரபி கருவி, ரூ.1.5 கோடி மதிப்பில் பிரக்திக் தெரபி கருவி, ரூ.2 கோடி மதிப்பில் சிடி ஸ்கேன் கருவி உள்ளிட்ட நவீன கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.
புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளான உடலின் பாகத்துக்கு மட்டும் சிகிச்சை அளிக்கவும், பிறஉடற் பகுதிகள் பாதிக்கப்படாமல் இருக்கவும் இந்த கருவிகள் உதவும். இந்த மையத்தின் மூலம் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் பயன்பெறுவார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளான உடலின் பாகத்துக்கு மட்டும் சிகிச்சை அளிக்கவும், பிறஉடற் பகுதிகள் பாதிக்கப்படாமல் இருக்கவும் இந்த கருவிகள் உதவும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago