தி.மலை மாவட்ட விவசாயிகள் நவரை நெல் மற்றும் ரபி பருவத் தில் பயிர் காப்பீட்டு தொகை செலுத்தலாம் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், “பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், பயிர் வாரியாக காப்பீட்டுத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள் ளது.
நவரை மற்றும் ரபி பருவத்தில் நெல், கம்பு, கரும்பு, நிலக்கடலை, எள் போன்ற வேளாண் பயிர்களும், வாழை போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகை செலுத்த காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மூலம் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீட்டுத் தொகையை விவசாயிகள் செலுத்தலாம்.
தி.மலை மாவட்டத்தில் ஓர் ஏக்கர் நவரை நெல் பயிருக்கு ரூ.436.50, கம்புக்கு ரூ.156, எள்ளுக்கு ரூ.141.75, கரும்புக்கு ரூ.2,600 மற்றும் வாழைக்கு ரூ.2,680 என காப்பீட்டு தொகை செலுத்த வேண்டும்.
இந்த திட்டத்தில் பதிவு செய்ய நெல் பயிருக்கு வரும் 22-ம் தேதியும், கரும்புக்கு அக்டோபர் 31-ம் தேதியும், வாழை மற்றும் கம்புக்கு மார்ச் 1-ம் தேதியும், எள்ளுக்கு மார்ச் 14-ம் தேதியும் கடைசி நாளாகும். இயற்கை சீற்றங்களால் பயிர்களுக்கு ஏற்படும் மகசூல் இழப்புகளில் இருந்து பாதுகாத்திட காப்பீட்டுத் தொகை செலுத்தி பயன்பெறலாம்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago