ஆதரவற்ற குழந்தைகளை மீட்க ‘புன்னகையை தேடி’ மீட்புக்குழு வாகனம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆதரவற்ற குழந்தைகளை மீட்க ‘புன்னகையை தேடி’ மீட்புக்குழு வாகனத்தை ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை பொது இடங்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகள், காணாமல் போன குழந்தைகள், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளை மீட்டெடுத்து மறுவாழ்வு அளிக்கும் வகையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட காவல் துறை, தொழிலாளர் துறை மற்றும் சைல்டு லைன் ஆகியோர் கொண்ட குழுவினரால் ‘புன்னகையை தேடி’ என்ற மீட்புக் குழு வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது. இதனை, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது, ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கூறும் போது, ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் தெருவோரங்கள், கோயில்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை திடீர் ஆய்வு மூலம் கண்டறிந்து மீட்கப்படுவதுடன், பெற்றோர் அல்லது குழந்தைகள் இல்லத்தில் மறு வாழ்வுக்காக சேர்க்கப்படுவார்கள்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில் வாகனன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கண்ணன் ராதா, குழந்தை தொழிலாளர் துறை தடுப்பு திட்ட அலுவலர் ராஜபாண்டியன், குழந்தைகள் நலக்குழும தலைவர் சிவகலை வாணன், சைல்டு லைன் ஒருங் கிணைப்பாளர் தேவேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்