வேலூரில் மார்க்கெட் பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வணிகர் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
வேலூரில் அனைத்து வணிகர் கள் சங்கத்தின் அவசர ஆலோ சனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு, மாவட்டத் தலைவர் இரா.ப.ஞானவேலு தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஏ.வி.எம்.குமார் வரவேற்றார். இதில், வேலூரில் வணிகர்களுக்கு ரவுடிகள் தொல்லையால் பாதுகாப்பு இல்லை. எனவே, ரவுடிகள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலூரில் ஆரணி சாலை, சுண்ணாம்புக்கார தெரு, சாரதி மாளிகை, நேதாஜி மார்க்கெட், லாங்கு பஜார் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
சவ ஊர்வலங்களின் போது மக்கள் கூடும் இடங்கள், வணிகம் செய்யும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago