டெல்லியில் போராடிய விவசாயிகளுக்காக கடலூர், விழுப்புரத்தில் உண்ணாவிரதம்

By செய்திப்பிரிவு

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியின்போது விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய மத்திய அரசை கண்டித்து விழுப்புரம் நகராட்சி திடலில் நேற்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடை பெற்றது.

இந்த உண்ணாவிரதத்திற்கு, விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். போராட்டத்தில் மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ், முன்னாள் எம் எல் ஏ ராமமூர்த்தி, இந்திய கம்யூனிட் கட்சியின் மாநில குழுவைச் சேர்ந்த ஏவி சரவணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடலூரில் உண்ணாவிரதம்

கடலூர் மாவட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் கடலூரில் நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது.

அகில இந்திய விவசாயிகள் போராட்ட குழு அமைப்பாளர் மாதவன் தலைமை தாங்கினார். திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் போராட் டத்தை தொடங்கி வைத்தார். காவிரி டெல்டா விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன், திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளபுகழேந்தி, காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் சுப்பராயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உளுந்தூர்பேட்டையில்

உண்ணாவிரதம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி உளுந்தூர் பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே விவசாய அமைப்பினர் நேற்று உண்ணாவிரதப் போராட் டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு டெல்லியில் நடந்த விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து பேசினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்